இந்துத்துவாவில் நவநிர்மாண் சேனாவால் சாதிக்க முடியாது ராஜ் தாக்கரே மீது சிவசேனா தாக்கு
இந்துத்துவாவில் நவநிர்மாண் சேனா கட்சியால் எதுவும் சாதிக்க முடியாது என ராஜ் தாக்கரேவை சிவசேனா கடுமையாக தாக்கியுள்ளது.
மும்பை,
நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தனது கட்சிக்கு காவி நிறத்தில் புதிய கொடியை அறிமுகப்படுத்தினார். அதுமட்டும் இன்றி பாகிஸ்தான், வங்க தேசத்தில் இருந்து ஊடுருவிய முஸ்லிம்களை நாடு கடத்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவாகவும் அவரின் பேச்சு அமைந்தது.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப் பதாவது:-
பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து ஊடுருவிய முஸ்லிம்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றவேண்டும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்காக ஒரு கட்சி தனது கொடியை மாற்றுவதைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது.
14 ஆண்டுகளுக்கு முன்பு மராத்தி பிரச்சினையை முன்னிறுத்தி ராஜ் தாக்கரே தனது கட்சியை நிறுவினார். ஆனால் அந்த கட்சி இப்போது இந்துத்துவாவை நோக்கி திரும்புவதாக தெரிகிறது.
வீர சாவர்க்கர் மற்றும் பாலாசாகேப் (பால்தாக்கரே) ஆகியோரின் இந்துத்துவாவை கையாள்வது ஒன்றும் குழந்தையின் விளையாட்டு இல்லை. இருப்பினும் அவர் இந்துத்துவா சார்பு நிலைப்பாட்டை எடுத்ததற்காக நாங்கள் அவரை திறந்த மனதுடன் வரவேற்க கடமைப்பட்டுள்ளோம். கடன் வாங்கப்பட்ட சித்தாந்தம் என்றாலும் அது இந்துத்துவா சார்புடையது. நீங்கள் அதை செய்ய முடியும் என்று நினைத்தால் தொடர்ந்து அதே பாதையில் செல்லுங்கள்.
மராத்தி மொழி பிரச்சினையில் சிவசேனா ஏற்கனவே நிறைய வேலைகளை செய்திருந்தது. எனவே மராத்தியர் களிடம் நவநிர்மாண் சேனாவுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
பாரதீய ஜனதா விரும்பியபடி ராஜ் தாக்கரே இந்துத்துவாவை நோக்கி திரும்பியுள்ளதாக விமர்சனங்கள் எழுகிறது. சிவசேனா நாடு முழுவதும் இந்துத்துவாவுக்காக நிறைய பணிகள் செய்துள்ளதால் நவநிர்மாண் சேனாவால் எதையும் சாதிக்க முடியாது.
சிவசேனா கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததால் சித்தாந்தத்தை கைவிட்டுவிட்டதாக அர்த்தம் இல்லை. விமர்சனத்தை விட, இதில் நெஞ்செரிச்சல் அதிகமாக உள்ளது. பாரதீய ஜனதா மெகபூபா முப்தி உட்பட யாருடனும் கைகோர்க்க முடியும். ஆனால் மற்றவர்கள் இதேபோன்ற அரசியல் நடவடிக்கையை எடுத்தால் அது பாவமாகிவிடும். ஆட்சியில் உள்ள 3 கட்சிகளின் சித்தாந்தங்கள் வேறுபட்டிருந்தாலும், மக்களின் நலனுக்காக அரசாங்கம் நடத்தி வரும் எங்களிடம் ஒருமித்த கருத்து உள்ளது. 5 ஆண்டுகளில் பாரதீய ஜனதாவால் செய்ய முடியாததை புதிய அரசு 50 நாட்களில் சாதித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story