கவர்னர் மீது பழிபோட்டு தப்பிக்க கூடாது மக்களுக்கான திட்டங்களை போராடி செயல்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு சிவா எம்.எல்.ஏ. பேச்சு
மக்களுக்கான திட்டங்களை போராடி செயல்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. கவர்னர் மீது பழிபோட்டு தப்பிக்கக்கூடாது என்றுசிவா எம்.எல்.ஏ.கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க. மாணவரணி மற்றும் உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுவை புதிய பஸ்நிலையம் அருகே நடந்த பொதுகூட்டத்திற்கு மாணவரணி அமைப்பாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் குணாதிலிபன், தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் மாறன், இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-
மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற தவறான பொருளாதார கொள்கைகளால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மூலமாக முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் இல்லை என மோடி பொய் கூறுகிறார். பெரியார் குறித்து யார் அவதூறு பரப்பினாலும் தட்டிக்கேட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதற்கு கவர்னர் கிரண்பெடி தான் காரணம் என பழிபோடுகிறார்கள். அனைத்திற்கும் பிறர் மீது பழிபோட்டு தப்பிக்க கூடாது. மக்களுக்கான திட்டங்களை போராடி செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
புதுவையில் உள்ள மில்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலை, அரசு சார்பு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மக்களை சீரழிக்கும் கேசினோ சூதாட்டம், லாட்டரி சீட்டு திட்டங்களை புதுவையில் செயல்படுத்த விடமாட்டோம். அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பால பணி எப்போது முடியும் என்பது தெரியவில்லை. உப்பனாறு மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக தொகுதி செயலாளர் சக்திவேல் வரவேற்றார். இதில் தி.மு.க. அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாணவரணி துணை அமைப்பாளர் ரெமி எட்வின் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story