மாவட்ட செய்திகள்

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.776¼ கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது - கோட்ட மேலாளர் அஜய்குமார் தகவல் + "||" + At the Trichy Railway Line Ru776 revenue earned in the last year Divisional Manager ajaykumar Information

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.776¼ கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது - கோட்ட மேலாளர் அஜய்குமார் தகவல்

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.776¼ கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது - கோட்ட மேலாளர் அஜய்குமார் தகவல்
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.776¼ கோடி ஒட்டு மொத்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார் கூறினார்.
திருச்சி, 

71-வது குடியரசு தினவிழாவையொட்டி திருச்சி கல்லுக்குழி ரெயில்வே மைதானத்தில் தேசிய கொடியேற்றும் விழா நேற்று காலை நடந்தது. திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து, ரெயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

இதில் மூத்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் ரெயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார் பேசியதாவது:-

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் கடந்த நிதியாண்டில் ரூ.776¼ கோடி ஒட்டு மொத்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 13.85 சதவீதம் அதிகமாகும். ரெயில்களில் சரக்குகளை கையாண்டதன் மூலம் மட்டும் ரூ.435 கோடியே 69 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 15.66 சதவீதம் அதிகமாகும். நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு 8.134 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 13 சதவீதம் அதிகமாகும். திருச்சி ரெயில்வே கோட்டத்தில் கடந்த ஆண்டு 3 கோடியே 15 லட்சம் ரெயில் பயணிகள் மூலம் ரூ.278 கோடியே 17 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் ரெயில்கள் குறித்த நேரத்தில் பயணிப்பது 89.98 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையே 75 கி.மீ.தூரத்துக்கு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி ரெயில் நிலையத்தில் மறுவளர்ச்சி பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. திருச்சி கோட்டத்தில் ஆளில்லா ரெயில்வே கேட்கள் உள்ள 9 இடங்களில் புதிதாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி கோட்டத்தில் உள்ள 103 ரெயில் நிலையத்திலும் வை-பை வசதி வழங்கப்பட்டு, இது ரெயில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கடலூர் துறைமுகம் -மயிலாடுதுறை மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் இடையே 114 கி.மீ. தூரத்தில் ரெயில்வே பாதை மின்மயமாக்கும் பணி வருகிற மார்ச் மாதத்தில் நிறைவு பெறும்.தஞ்சை-நாகப்பட்டினம்-காரைக்கால் வழித்தடத்தில் 103 கி.மீ.தூரமுள்ள ரெயில்வே பாதை மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியும் மார்ச் மாதம் முடிவடையும்.

திருச்சி ரெயில் நிலையத்தின் கூடுதல் நுழைவு பாதையில் நடைமேம்பாலத்தை இணைக்கும் வகையில் கூடுதலாக நகரும் படிக்கட்டுகள் (எக்ஸ்லேட்டர்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம், அரியலூர், கடலூர் துறைமுகம் சந்திப்பு, மயிலாடுதுறை, விருத்தாசலம், திருச்சி கோட்டை, அயனாபுரம், திருவெறும்பூர், வடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் பிளாட்பாரங்கள் விரிவுப்படுத்தும் பணி ரூ.4 கோடியில் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினரின் சாகசங்களும், மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தொடர்புடைய செய்திகள்

1. திருமானூர் அருகே, இயற்கை எரிவாயு திட்டத்தின் மூலம் வருவாய் ஈட்டி வரும் விவசாயி
திருமானூர் அருகே இயற்கை எரிவாயு திட்டத்தின் மூலம் விவசாயி ஒருவர் வருவாய் ஈட்டி வருகிறார்.
2. ஆசிரியர் தகுதி தேர்வு; தேர்வு வாரியத்திற்கு ரூ.20 கோடி வருவாய்
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களால் தேர்வு வாரியத்திற்கு ரூ.20 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
3. சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ.272 கோடி அதிகரிப்பு: கவர்னர் உரையில் தகவல்
சரக்கு மற்றும் சேவை வரி மூலம் வருவாய் ரூ.272 கோடி அதிகரித்துள்ளதாக கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.