விபத்தில் மூளைச்சாவு அடைந்த தனியார் காப்பீட்டு நிறுவன முகவரின் உடல் உறுப்புகள் தானம் - 6 பேருக்கு மறுவாழ்வு


விபத்தில் மூளைச்சாவு அடைந்த தனியார் காப்பீட்டு நிறுவன முகவரின் உடல் உறுப்புகள் தானம் - 6 பேருக்கு மறுவாழ்வு
x
தினத்தந்தி 26 Jan 2020 10:15 PM GMT (Updated: 26 Jan 2020 7:02 PM GMT)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த தனியார்மருத்துவ காப்பீட்டுநிறுவன முகவரின் உடல் உறுப்புகள்தானமாக பெறப்பட்டது. இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெறுகின்றனர்.

கோவை,

சேலம்நால்ரோடுராஜாராம்நகரை சேர்ந்தவர்சுரேஷ்(வயது 54). இவர் தனியார்மருத்துவ காப்பீட்டுநிறுவனமுகவராக பணியாற்றிவந்தார். இவருடைய மனைவிபரிமளா(48). இவர்களுக்குதிலக்(23),ஸ்ரீபதி(18) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 19-ந்தேதி சுரேஷ்சென்னையில் இருந்து கார் மூலம் சேலம் புறப்பட்டார். அப்போதுவிக்கிரவாண்டிஅருகேமுண்டியம்பாக்கம்பகுதியில் நடந்த விபத்தில்சுரேஷ்படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் அரசுஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.

இதையடுத்து அவர்மேல்சிகிச்சைக்காககோவைகே.எம்.சி.எச்.மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது.இருப்பினும்அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இதுகுறித்து அவருடைய மனைவிபரிமளாமற்றும்சுரேசின்சகோதரரானஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில உடற்பயிற்சிஇணை செயலாளர்பாலாஜிஆகியோரிடம்டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்துஅவா்கள்சுரேசின்உடல்உறுப்புகளை தானம்செய்ய முன்வந்தனர்.

இதையடுத்து தமிழ்நாடுஉறுப்பு தானஆணையத்தின் அனுமதியுடன் அவருடைய சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவைதானமாக பெறப்பட்டது. சிறுநீரகங்கள்கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், கண்கள், தோல் மற்றும்எலும்பு கோவையில்உள்ள தனியார்மருத்துவமனைக்கும்வழங்கப்பட்டது. இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெறுகின்றனர்.

இதுகுறித்துகே.எம்.சி.எச்.மருத்துவமனை தலைவர்நல்லபழனிசாமிகூறும்போது, மக்களிடையே உடல்உறுப்பு தானம்குறித்து அதிகவிழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவருடைய உடல் உறுப்புகள் தானமாகவழங்கப்பட்டால்அது பலரது உயிரை காப்பாற்ற உதவும் என்றார்.

Next Story