தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு, சம்பளம் வழங்காததை கண்டித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்


தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு, சம்பளம் வழங்காததை கண்டித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 26 Jan 2020 10:15 PM GMT (Updated: 26 Jan 2020 11:58 PM GMT)

என்.பஞ்சம்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், தேசிய ஊரக வேலை திட்டத்தில், முறையாக சம்பளம் வழங்காததை கண்டித்து அதிகாரிகளுடன், தொழிலாளர்கள் வாக்குவாதம் செய்தனர்.

திண்டுக்கல், 

குடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நந்தீஸ்வரன் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட இயக்குனர் கவிதா, ஊராட்சி உதவி இயக்குனர் கங்காதரணி, வேடசந்தூர் தாசில்தார் ராஜேஸ்வரி, வடமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவலிங்கராமசுப்பிரமணி, ஊராட்சி தலைவர் கோமதி பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுப்பது, விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க வழங்கப்படும் மானியம், குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் அளிக்கப்படும் சத்துணவுகள் மற்றும் பல முக்கிய அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

குஜிலியம்பாறை அருகே கரிக்காலி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சிமன்ற தலைவர் ஜெயமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வி, ஊராட்சி செயலாளர் மூக்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கரூர் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்டு உள்ளாட்சி அமைப்பின் அதிகாரம் குறித்து, பொதுமக்களிடம் விளக்கினார். சித்தரேவு ஊராட்சியில் தலைவர் வளர்மதி தலைமையிலும், தேவரப்பன்பட்டி ஊராட்சியில் தலைவர் ரேவதி தலைமையிலும், அய்யன்கோட்டை ஊராட்சியில் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி மைக்கேல் பாளையத்தில் ஊராட்சி தலைவர் சுகந்தா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திண்டுக்கல் நிலக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மைக்கேல் பாளையம், செங்கோட்டை ஆகிய கிராமங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நூத்துலாபுரம் ஊராட்சி சீத்தா புரத்தில் ஊராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அங்கு வந்த நிலக்கோட்டை தாசில்தார் யூஜின், துணை தாசில்தார் டேனியல், கிராம நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கூட்டத்தில், விராலிப்பட்டி, நூத்துலாபுரம், சின்ன நாயக்கன்கோட்டை, என்.ஊத்துபட்டி உள்ளிட்ட கிராமங்களில் சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும், முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிலுக்குவார்பட்டியில் ஊராட்சி தலைவர் செல்வி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பிள்ளையார்நத்தத்தில் ஊராட்சி தலைவர் முனிராஜா தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. முசுவனூத்து ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூவனூத்து ஊராட்சி கே.குரும்பபட்டியில் ஊராட்சி தலைவர் அன்பழகன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

நக்காலூத்து ஊராட்சி அக்காரபட்டியில் ஊராட்சி தலைவர் ஜோதிலட்சுமி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வீலிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் வீருசின்னு தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பாண்டி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராமங்களில் நடந்த கிராம சபை கூட்டங்களில் அணைப்பட்டி பெரியார் பிரதான கால்வாயில் உள்ள 11-வது மதகு அமைந்துள்ள இடத்தில் இருந்து புதிய கால்வாய் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையாளர் லாரன்ஸ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

நத்தம் ஒன்றியம் புன்னப்பட்டி ஊராட்சியில் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையிலும், வேலம்பட்டி ஊராட்சியில் தலைவர் கண்ணன் தலைமையிலும், பண்ணுவார்பட்டி ஊராட்சியில் தலைவர் ஆண்டிச்சாமி தலைமையிலும், செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் தலைவர் சவுந்தரராஜன் தலைமையிலும், லிங்கவாடி ஊராட்சியில் தலைவர் அழகுநேரு தலைமையிலும், ஊராளிபட்டி ஊராட்சியில் தலைவர் தேனம்மாள் தேன்சேகர் தலைமையிலும், ரெட்டியபட்டி ஊராட்சியில் தலைவர் சாத்திபவுர் தலைமையிலும், சாத்தம்பாடி ஊராட்சியில் தலைவர் பரமேஸ்வரி தலைமையிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

செந்துறை ஊராட்சிக்குட்பட்ட ரெங்கையன்சேர்வைகாரன்பட்டி மந்தைதிடலில் குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் சவரிமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் செந்துறை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல் கோசுகுறிச்சி, குடகிப்பட்டி, சிரங்காட்டுப்பட்டி, குட்டுப்பட்டி, சேத்தூர், கோட்டையூர், ஆவிச்சிபட்டி, ந.புதுப்பட்டி, சிறுகுடி, சமுத்திராபட்டி, ஊராளிபட்டி, பூதகுடி ஆகிய ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

ஆத்தூர் ஒன்றியம் என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் தலைவர் பாப்பாத்தி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கவில்லை என்றும், சம்பள தொகையும் குறைவாக வழங்கப்படுவதாகவும், இதற்கு காரணமான 4 பணியாளர்களை மாற்ற வேண்டும் என கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் வாக்குவாதம் செய்தனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் மற்றும் போலீசார் வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

இதேபோல் தொப்பம்பட்டி ஊராட்சியில் நடந்த கூட்டத்துக்கு தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் ராமசாமி அரசன் திட்டங்களை வாசித்தார். அப்போது பொது மக்கள் ஊராட்சியில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தகுதியுள்ளவர்களுக்கு வழங்க வேண்டும், குடிநீர் முறையாக வினியோகிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி கூச்சல் போட்டனர். இதனால் கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால் பகல் 3 மணிக்கு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

வெள்ளோடு ஊராட்சியில் திண்டுக்கல் ஒன்றிய குழு துணைத்தலைவர் சோபியாராணி தலைமையிலும், ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் தலைவர்ஆறுமுகம் தலைமையிலும், அம்பாத்துரை ஊராட்சியில் தலைவர் சேகர் தலைமையிலும், கலிக்கம்பட்டி ஊராட்சியில் தலைவர் கோமதி தலைமையிலும், காந்திகிராம ஊராட்சியில் தலைவர் தங்கமுனியம்மா தலைமையிலும், முன்னிலைகோட்டை ஊராட்சியில் அந்தோணியம்மாள் தலைமையிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

மணலூர் ஊராட்சியில் தலைவர் லதா தலைமையிலும், கே.சி.பட்டி ஊராட்சியில் தலைவர் ஜீவா தலைமையிலும், பெரியூர் ஊராட்சியில் தலைவர் புஷ்பராணி தலைமையிலும், பாச்சலூர் ஊராட்சியில் தலைவர் தயாநிதி தலைமையிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன. இதேபோல் காமனூர், தாண்டிக்குடி, பூலத்தூர் ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரத்தில் ஊராட்சி தலைவர் கணேஷ்பிரபு தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதேபோல் ஒன்றிய முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

தொப்பம்பட்டி ஒன்றியம் அக்கரைப்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் தனலட்சுமி தலைமை தாங்கினார். பழனி சப்-கலெக்டர் உமா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். கூட்டம் முடிந்த பின்னர் ஊராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கீரனூர் அருகே பாலப்பன்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் சண்முகவேல் தலைமை தாங்கினார்.

கொழுமம்கொண்டான் ஊராட்சியில், தலைவர் மணியரசு தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதேபோல் பழனி ஊராட்சி ஒன்றியத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதில் கிராம வளர்ச்சி தொடர்பாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் சந்தையூரில் ஊராட்சி தலைவர் ஜோதி விஜயரங்கன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. விராலிப்பட்டியில் நடந்த கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். கணவாய்ப்பட்டியில் ஊராட்சி தலைவர் ரமேஷ் தலைமையிலும், ஜி.தும்மலப்பட்டியில் ஊராட்சி தலைவர் ஜெயப்ரியா நடராஜன் தலைமையிலும், பழைய வத்தலக்குண்டுவில் ஊராட்சி தலைவர் யசோதை முருகேசன் தலைமையிலும், கட்டக்காமன்பட்டியில் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி பாண்டி தலைமையிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

அதேபோல் கோட்டைப்பட்டியில் ஊராட்சி தலைவர் வனிதா மாணிக்கம் தலைமையிலும், ரெங்கப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி தலைவர் மொக்கையன் தலைமையிலும், விருவீடுவில் ஊராட்சி தலைவர் தர்மர் தலைமையிலும், குன்னுவாரன்கோட்டையில் ஊராட்சி தலைவர் வளர்மதி பிச்சைமணி தலைமையிலும், கோம்பைபட்டியில் ஊராட்சி தலைவர் காமாட்சி கென்னடி தலைமையிலும், விராலிமாயன்பட்டியில் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜன் தலைமையிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

Next Story