மாவட்ட செய்திகள்

வெள்ளகோவில் அருகே மொபட் மீது வேன் மோதல்; 2 பேர் பலி + "||" + Near Vellakoil, Van collision on Mopat; 2 killed

வெள்ளகோவில் அருகே மொபட் மீது வேன் மோதல்; 2 பேர் பலி

வெள்ளகோவில் அருகே மொபட் மீது வேன் மோதல்; 2 பேர் பலி
வெள்ளகோவில் அருகே மொபட் மீது வேன் மோதியது. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வெள்ளகோவில்,

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சிங்காரவேலன்(வயது 33). அதே ஊரை சேர்ந்தவர் சேமலை(50). இருவரும் கூலி தொழிலாளர்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் இருவரும் மொபட்டில் உப்புபாளையத்தில் இருந்து பாப்பம்பாளையத்திற்கு வந்து கொண்டு இருந்தனர். மொபட்டை சிங்காரவேலன் ஓட்டினார். பின்னால் சேமலை உட்கார்ந்திருந்தார்.

அவர்கள் வந்த மொபட் வெள்ளகோவில் அருகே காடையூரான்வலசு என்ற இடத்தில் வந்த போது எதிரே காங்கேயத்தில் இருந்து வெள்ளகோவில் நோக்கி வந்த ஒரு வேன், மொபட் மீது மோதியது.

இதில் மொபட்டை ஓட்டி வந்த சிங்காரவேலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சேமலையை அக்கம், பக்கத்தினர் மீட்டு காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இறந்த சிங்காரவேலனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சேமலைக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) எஸ்.ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் விஜயசேகரன் ஆகியோர் தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகிறார்கள்.