மாவட்ட செய்திகள்

கிரீப்பாறை அருகே, மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை + "||" + Worker commits suicide as wife breaks up

கிரீப்பாறை அருகே, மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை

கிரீப்பாறை அருகே, மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
கீரிப்பாறை அருகே மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:
அழகியபாண்டியபுரம்,

கீரிப்பாறை அருகே தடிக்காரன்கோணம் பால்குளம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன்(வயது 37), தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், பத்மநாபனை பிரிந்து அவரது மனைவி கொத்தன்மேடு பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார்.

சம்பவத்தன்று பத்மநாபன் கொத்தன்மேட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால், அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த பத்மநாபன் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பத்மநாபன் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து கீரிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...