செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறப்பு
x
தினத்தந்தி 28 Jan 2020 3:45 AM IST (Updated: 28 Jan 2020 3:35 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறக்கப்பட்டது.

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உதயமாகி 6 வார காலம் ஆகிய நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தற்காலிக புதிய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.

அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விபத்துக்களை குறைக்க இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தலையில் ஹெல்மெட் அணிந்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், செல்போனில் பேசிக் கொண்டும், குடிபோதையில் வாகனம் ஒட்டக்கூடாது என்றும் வாகன ஓட்டிகளிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாலசந்தர், பொன்ராம், மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உள்ளிட்ட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Next Story