வேதாரண்யத்தில், விவசாயியை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது


வேதாரண்யத்தில், விவசாயியை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2020 3:30 AM IST (Updated: 28 Jan 2020 10:39 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் விவசாயியை மிரட்டி பணம் பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்,

வேதாரண்யத்தை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது34). விவசாயி. இவர் சம்பவத்தன்று திருத்துறைப்பூண்டி சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் கரியாபட்டினம் வழியாக வேதாரண்யத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சாருமடை கடைவீதி அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் நாகலிங்கம் வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து நாகலிங்கம் கரியாப்பட்டினம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுபா‌‌ஷ்சந்திரபோஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நாகலிங்கத்திடம் இருந்து பணம் பறித்து சென்றது தொடர்பாக வேதாரண்யத்தை சேர்ந்த செந்தில்குமார்(35), திருத்துறைப்பூண்டியை சேர்ந்த மோனி‌‌ஷ்ராஜ் (23), முத்து (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சாம்ராஜ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story