மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் நலத்திட்ட உதவி - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்


மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் நலத்திட்ட உதவி - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
x
தினத்தந்தி 29 Jan 2020 4:15 AM IST (Updated: 28 Jan 2020 10:42 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் வழங்கினார்.

கரூர், 

மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் மாவட்ட வருவாய் அதிகாரியின் மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, 145 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

மக்கள்தொடர்பு திட்ட முகாம் மூலம் ஏழை, எளியோருக்கும் அரசு நலத்திட்டங்கள் சென்று சேர்கின்றன. மேலும் முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி நடத்தப்பட்ட சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் 35 ஆயிரம் பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு அதில் 23 ஆயிரத்து 939 ேபரின் மனுக் களுக்கு உடனுக்குடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்டதில் 8 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித் தொகைகள் வழங்கப் பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் மீண்டும் கணக்கெடுக்கப்பட்டு மீதமுள்ள நபர்களுக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் திட்டங்களை அனைவரும் முறையாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக இந்த முகாமில் வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை வாயிலாக சிறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளதை அமைச்சர் பார்வையிட்டார். துறைசார்ந்த அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

முகாமில் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன், கலால்துறை உதவி ஆணையர் மீனாட்சி, ஒருந்கிைணந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி கீதா, தாசில்தார்கள் செந்தில்குமார், ராஜசேகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மற்றும் கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராஜவேலு உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story