மாவட்ட செய்திகள்

அடையாறில் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + In Adyar ITI student Suicide by hanging

அடையாறில் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

அடையாறில் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
அடையாறில் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை, 

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய்(வயது 19). இவர், சென்னை அடையாறு கோவிந்தராஜபுரத்தில் உள்ள அவரது மாமா ராஜதுரை வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக தங்கியிருந்து, தற்போது கிண்டியில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.யில் ஏ.சி. மெக்கானிக் படித்து வந்தார்.

விஜய் கடந்த 2 நாட்களாக வீட்டில் யாரிடமும் சரிவர பேசாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த அடையாறு போலீசார் மாணவரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவர் விஜயின் இறப்பு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமணமான 4 ஆண்டுகளில் சோகம்: நர்சு தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
ஆவடி அருகே திருமணமாகி 4 ஆண்டுகளில் நர்சாக பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. தாய்க்கு உடல் நிலை சரி இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தாய்க்கு உடல் நிலை சரிஇல்லாததால் தன்னை தவிக்கவிட்டு இறந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. ஆத்தூர் அருகே, பெண் தூக்குப்போட்டு தற்கொலை - வீட்டு செலவுக்கு கணவர்-மகன்கள் பணம் கொடுக்காததால் சோக முடிவு
ஆத்தூர் அருகே வீட்டு செலவுக்கு கணவரும், மகன்களும் பணம் கொடுக்காமல் வீணாக செலவு செய்ததால் மனமுடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. ஆர்.கே.பேட்டை அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆர்.கே.பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. ஆரணி அருகே, புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
ஆரணி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.