எந்திரங்கள் தட்டுப்பாட்டால் சீர்காழி பகுதியில் சம்பா அறுவடை பணி பாதிப்பு - விவசாயிகள் வேதனை
சீர்காழி பகுதியில் எந்திரங்கள் தட்டுப்பாட்டால் சம்பா அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
சீர்காழி,
சீர்காழி பகுதியில் வைத்தீஸ்வரன்கோவில், எடக்குடி வடபாதி, கதிராமங்கலம், கன்னியாக்குடி, திருப்பங்கூர், ஆதமங்கலம், பெருமங்கலம், புங்கனூர், கொண்டல், வள்ளுவகுடி, மருதங்குடி, நிம்மேலி, கற்கோவில், மருவத்தூர், குமாரநத்தம், விளந்திடசமுத்திரம், அத்தியூர், திட்டை, தில்லைவிடங்கன், சட்டநாதபுரம், செம்மங்குடிஉள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து இருந்தனர். தற்போது விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அறுவடை எந்திரங்கள் மற்றும் ஆட்கள் கிடைக்காததால் சம்பா அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், நெல்லை அறுவடை செய்ய முடியாமல் வேதனை அடைந்து வருகின்றனர். குறிப்பிட்ட காலத்திற்குள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் நெற்பயிர்கள் சேதம் அடைந்து வருகிறது.
எனவே அரசு உடனடியாக வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து கூடுதலாக நெல் அறுவடை எந்திரங்களை கொண்டுவந்து சீர்காழி பகுதியில் அறுவடை பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story