மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் அருகே, சிறப்பு கிராம சபை கூட்டம் - கலெக்டர் சிவன்அருள் பங்கேற்பு + "||" + Near Thirupattur, Special Village Council Meeting The participation of Collector Shiva Arul

திருப்பத்தூர் அருகே, சிறப்பு கிராம சபை கூட்டம் - கலெக்டர் சிவன்அருள் பங்கேற்பு

திருப்பத்தூர் அருகே, சிறப்பு கிராம சபை கூட்டம் - கலெக்டர் சிவன்அருள் பங்கேற்பு
திருப்பத்தூர் அருகே சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் பங்கேற்றார்.
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் ஒன்றியம் அச்சமங்கலம் ஊராட்சியில் காந்தி நினைவு நாளையொட்டி தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் சுகாதார மற்றும் நோய் தடுப்பு இணை இயக்குனர் டாக்டர் கே.டி.சுரே‌‌ஷ் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கலந்துகொண்டு பேசுகையில், அகிம்சை முறையில் சுதந்திரம் பெற்று தந்தவர் காந்தி. தொழுநோய் வந்தவர்களை தொடு சிகிச்சை அளித்ததால் அவரை மகாத்மா என்று அழைக்கிறோம். தொழுநோய் ஒழிப்பில் தமிழக அரசு வெற்றி கண்டுள்ளது. நாம் நமது உடலை நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும் ஆரோக்கியமானதாகவும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். கைகழுவி உணவு அருந்த வேண்டும். தொழுநோய் அறிகுறிகள் தேம்பல் போன்று இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். கண்டிப்பாக தொழு நோய் குணப்படுத்தலாம். தமிழக அரசு கிராமம் தோறும் நடமாடும் மருத்துவமனை மூலம் அனைவருக்கும் கிராமத்திற்கே சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றார்.

கூட்டத்தில் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் நடமாடும் மருத்துவமனை அலுவலர் டாக்டர் சுரே‌‌ஷ், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி திலகம், ஊராட்சி செயலாளர் பிரபாகரன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சுகாதார துறை இணை இயக்குனர் நேர்முக உதவியாளர் சங்கரன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு பொதுத் தேர்வை 54 ஆயிரத்து 493 மாணவ–மாணவிகள் எழுதுகின்றனர்; கலெக்டர் தகவல்
இந்த கல்வி ஆண்டில் 10,11,12–ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை 54 ஆயிரத்து 493 மாணவ – மாணவிகள் எழுத உள்ளதாக கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்.
2. திருப்பத்தூரில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் சிவன்அருள் தேசிய கொடியேற்றினார்
திருப்பத்தூரில் நடந்த குடியரசுதின விழாவில் கலெக்டர் சிவன்அருள் தேசிய கொடியேற்றிவைத்து, ரூ.7 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
3. திருப்பத்தூர் அருகே, ஆரோக்கிய இந்தியா சைக்கிள் ஊர்வலம் - கலெக்டர் 3 கிலோ மீட்டர் ஓட்டி சென்றார்
ஆரோக்கிய இந்தியா சைக்கிள் ஊர்வலத்தில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் 3 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி சென்றார்.
4. திருவள்ளுவர் தினத்தையொட்டி 16-ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - கலெக்டர் சிவன்அருள் தகவல்
திருவள்ளுவர் தினத்தையொட்டி 16-ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
5. வாணியம்பாடி புதூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - கலெக்டர் வழங்கினார்
வாணியம்பாடி புதூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை கலெக்டர் சிவன்அருள் வழங்கினார்.