மாவட்ட செய்திகள்

பள்ளிப்பட்டு ஒன்றிய குழுத்தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது - துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு + "||" + Pallipattu Union chairman post AIADMK The takeover Postponement of vice presidential election

பள்ளிப்பட்டு ஒன்றிய குழுத்தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது - துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

பள்ளிப்பட்டு ஒன்றிய குழுத்தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது - துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
பள்ளிப்பட்டு ஒன்றிய குழுத்தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது.
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 12 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. உள்பட 7 ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்பட 5 ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். இதில் ஒன்றிய குழுத்தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

காலையில் ஒன்றிய குழுத்தலைவர் பதவிக்கான தேர்தல் ஒன்றிய தேர்தல் அலுவலர் சேகர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. ,தே.மு.தி.க. கவுன்சிலர்கள் 7 பேரும், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவரும் கலந்து கொண்டனர்.

தி.மு.க. கூட்டணியை சேர்ந்த வேறு கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. ஒன்றிய குழுத்தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த ஜான்சிராணி மனுதாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. தலைவர் பதவிக்கு 7 கவுன்சிலர்கள் ஆதரவு இருந்தால் போதும்.

ஜான்சிராணிக்கு 8 கவுன்சிலர்கள் ஆதரவு இருந்ததால் அவர் போட்டியின்றி ஏகமனதாக ஒன்றிய குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று காந்தியடிகள், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.