அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போலீசார் பயிற்சி அளிக்கும் திட்டம்


அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போலீசார் பயிற்சி அளிக்கும் திட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2020 11:32 PM GMT (Updated: 30 Jan 2020 11:32 PM GMT)

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போலீசார் பயிற்சி அளிக்கும் எஸ்.பி.சி. திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மும்பை,

மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு போலீசார், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கும் ஸ்டுடன்ட் போலீஸ் கேடட் (எஸ்.பி.சி.) திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல மாநிலங்களில், தேர்வு செய்யப்பட்ட 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக கோட்பாடு, சாலை பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, லஞ்ச ஒழிப்பு, பேரிடர் மேலாண்மை குறித்து போலீசார் பயிற்சி அளிக்கின்றனர்.

இதுதவிர வாழ்கை, பரிவு, சகிப்பு தன்மை, குழு முயற்சி, ஒழுக்கம் பற்றியும் மாணவர்களுக்கு போலீசார் வகுப்பு எடுக்கின்றனர்.

இந்த திட்டம் மராட்டியத்தில் விரைவில் 354 அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில உள்துறை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் நிதி ஒதுக்கப்படும். இந்தநிதியை அந்த பகுதி போலீஸ் கமிஷனர் அல்லது சூப்பிரண்டு வழங்குவார்.

Next Story