மனிதநேய வார விழாவில் நலத்திட்ட உதவி - அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்


மனிதநேய வார விழாவில் நலத்திட்ட உதவி - அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
x
தினத்தந்தி 1 Feb 2020 3:45 AM IST (Updated: 1 Feb 2020 2:13 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் நடைபெற்ற மனிதநேய வார விழாவில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.

சங்கரன்கோவில், 

தமிழகம் முழுவதும் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் மனித நேய வார விழா நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட அளவில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளின் விளையாட்டு போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான நிறைவு விழா சங்கரன்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கினார். ஆதி திராவிடர் நலத்துறை ஆணையர் முனியநாதன், தாட்கோ மேலாண்மை இயக்குனர் விஜயாராணி, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ரிட்டோ சிரியாக் ஆகியோர் சிறப்புரையாற்றினர். எம்.எல்.ஏ.க்கள் மனோகரன், செல்வமோகன்தாஸ்பாண்டியன், சங்கரன்கோவில் உதவி கலெக்டர் குமாரதாஸ், நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கணேசராஜா, ஆவின் தலைவர் சுதா பரமசிவம், நெல்லை கூட்டுறவு ஒன்றிய தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் ராஜலட்சுமி பரிசு வழங்கினார். 

தொடர்ந்து தாட்கோ சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். விழாவில் அரசு துறை அதிகாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story