பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு
பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கல்பாக்கம்,
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஆர்.எம்.வி. நகரை சேர்ந்தவர் ஆபுதீன். இவரது மகன் கலீல் ரஹ்மான் (வயது 18). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 31-ந் தேதி அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை காரைக்கால் பகுதியை சேர்ந்த சுரேஷ் (43) ஓட்டிச்சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சாவு
இதனால் படுகாயம் அடைந்த கலீல் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் மோதிய பஸ் எதிரே வந்த லாரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திண்டிவனம் அடுத்த வானுர் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் (39) மற்றும் பஸ் டிரைவர் சுரேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதில் கிழக்கு கடற்கரை சாலையில் நீண்ட நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கிறார்.
Related Tags :
Next Story