ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள பூங்குளம் ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.
மீஞ்சூர்,
மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள பூங்குளம் ஊராட்சியில் உள்ள 13 கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சின்னமாங்கோடு கிராமத்தில் கடந்த 2004-ம் ஆண்டில் அரசு சார்பில் ரூ.10 லட்சத்தில் சமுதாயக்கூடம் அமைக்க டெண்டர் விடப்பட்டது. இதையடுத்து, அப்போது சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வந்த நிலையில் கட்டிடம் முழுமை பெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆகியும் சமுதாயக்கூடத்தின் கட்டிட பணி முடிவடையாமல் பாழடைந்து உள்ளது.
இதைத்தொடர்ந்து, சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சின்னமாங்கோடு குப்பம் பஞ்சாயத்து சபையினர் மற்றும் பூங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ரோஜா ஆகியோருடன் ஊராட்சி துணைத் தலைவர் ரமேஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு நேற்று சென்று முற்றுகையிட்டனர்.
ஊராட்சி செயலாளரை மாற்ற...
அங்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், தங்கள் பகுதியில் ஊராட்சி செயலாளராக பணி செய்து வரும் சேகர் என்பவர் சமுதாயக்கூடம் கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், எனவே ஊராட்சி செயலாளரை மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story