காஞ்சீபுரத்தில் காவலர் நண்பர்கள் குழுவில் இணைந்த மாணவ, மாணவிகள் போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு


காஞ்சீபுரத்தில் காவலர் நண்பர்கள் குழுவில் இணைந்த மாணவ, மாணவிகள் போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Feb 2020 4:45 AM IST (Updated: 2 Feb 2020 3:32 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் காவலர் நண்பர்கள் குழுவில் மாணவ, மாணவிகள் இணைந்தனர்.

காஞ்சீபுரம்,

காவலர் நண்பர்கள் குழுவில் கல்லூரி மாணவ, மாணவிகள் இணையும் தொடக்க விழா நேற்று முன்தினம் மாலை காஞ்சீபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி கலந்து கொண்டு காவலர் நண்பர்கள் குழுவை தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில், போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி பேசும்போது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 5 தனியார் கல்லூரிகளை சேர்ந்த 354 மாணவ, மாணவிகள் காவலர் நண்பர்கள் குழுவில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டிலேயே காஞ்சீபுரம் மாவட்டத்தில் தான் காவலர் நண்பர்கள் குழு பணியில் கல்லூரி மாணவியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என்பது பெருமைக்குரியது. இவர்கள் பணியின்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, போலீசார் அவர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை யடுத்து, தேர்வு செய்யப்பட்ட 354 மாணவ, மாணவிகள் அனைவரும் காவலர்கள் நண்பர்கள் குழுவின் விதிமுறைகள் குறித்த உறுதிமொழியை ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில், மா வட்ட கூடுதல் போ லீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலைச்செல்வன், அருள்மொழி, இன்ஸ்பெக்டர்கள் சவுந்தரராஜன், சுரேஷ் சண்முகம், பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் அரிதாஸ், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story