தமிழ் சங்கத்துக்கு 23-ந் தேதி தேர்தல் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு


தமிழ் சங்கத்துக்கு 23-ந் தேதி தேர்தல் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 2 Feb 2020 4:13 AM IST (Updated: 2 Feb 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி தமிழ் சங்கத்திற்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடத்த பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி தமிழ் சங்க வாழ்நாள் உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டம் வில்லியனூரில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

இதில் புதுவை தமிழ் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 11 பேரை (2020 முதல் 2023 வரை) தேர்வு செய்வதற்கான தேர்தலை வருகிற 23-ந் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் தேர்தல் ஆணையராக பொறியாளர் ஜோசப் அதிரியன் ஆண்டோ நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுவையில் தமிழ் வளர்ச்சித்துறையை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். வணிக நிறுவனங்கள் பெயர் பலகையில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க பொருளாளர் சீனு.மோகன்தாஸ் நன்றி கூறினார்.

Next Story