ஊத்துக்கோட்டை பெண் தாசில்தாருக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் விருது
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தாளாளர் கே.சந்திரமோகன் தலைமை தாங்கினார்.
திருவொற்றியூர்,
மணலி பெரியதோப்பு காமராஜர் தெருவில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தாளாளர் கே.சந்திரமோகன் தலைமை தாங்கினார். பள்ளி கல்விக்குழு உறுப்பினர்கள் பொன்ராஜ், செல்வகாமராஜ், காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமையாசிரியை சித்ராஜெயசீலி வரவேற்றார். தலைமை ஆசிரியை ஜெகஜோதி ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறந்த மாணவி ஜோசிகாவுக்கு ‘கல்விச்செம்மல் காமாட்சி பாண்டியனார் விருதை’ தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் இயக்குனர் ஆடிட்டர். ஏ செல்வகணேசும், மக்கள் சேவையில் சிறந்து விளங்கும் ஊத்துக்கோட்டை பெண் தாசில்தார் செல்வி இளவரசிக்கு ‘பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் விருதினை’ நாடார் மகாஜன சங்க இணைச்செயலாளர் ஏ.வி.எஸ். மாரிமுத்துவும் வழங்கினர்.
பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சி.பி.சி.எல். முதன்மை பொறியாளர் ஜோஸ்வா மற்றும் துணை பொது மேலாளர் ரமேஷ்பாபு ஆகியோர் பரிசுகளை வழங்கினர். முன்னதாக பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆசிரியை சுஜாதா, மணலி வணிகர் பேரமைப்பு தலைவர் பால்ராஜ், நிதிக்குழு தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியை பானுமதி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story