படப்பை அருகே சாலையில் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி


படப்பை அருகே சாலையில் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 3 Feb 2020 4:30 AM IST (Updated: 3 Feb 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

படப்பை, வஞ்சூவாஞ்சேரி, செரப்பனஞ்சேரி, கரசங்கால் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் அதிகமாக சுற்றி திரிவது தொடர் கதையாக உள்ளது.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 6 வழிப்பாதை சாலைகளில் முக்கிய சாலையாக வண்டலூர்- வாலாஜாபாத் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் வாகனங்கள் செல்கிறது.

இந்த நிலையில் படப்பை, வஞ்சூவாஞ்சேரி, செரப்பனஞ்சேரி, கரசங்கால் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் அதிகமாக சுற்றி திரிவது தொடர் கதையாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

கால்நடைகள் சாலையிலேயே நிற்பதால் விபத்து ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, எனவே படப்பை , வஞ்சூவாஞ்சேரி. செரப்பனஞ்சேரி பகுதிகளில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளையும் பிடித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story