மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 7 இடங்களில் கையெழுத்து இயக்கம்
மாவட்டத்தில் மொத்தம் 7 இடங்களில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
விருதுநகர்,
தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு சட்டம் ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி நேற்று முதல் வருகிற 8-ந்தேதி வரை கையெழுத்து இயக்கம் நடைபெறும் என தி.மு.க. தலைமை அறிவித்திருந்தது. அதன்படி விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் கையெழுத்து இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் காதர் மொகைதீன், மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் முகம்மது இப்ராஹிம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகன் கலந்துகொண்டனர்.
கையெழுத்து இயக்கம்
இதேபோல் ராஜபாளையத்தில் ஜவஹர் மைதானம் அருகே நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. எம்.பி. தனுஷ் குமார், எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், யூனியன் சேர்மன் சிங்கராஜ், துணை சேர்மன் துரைகற்பகராஜ், முன்னாள் எம்.பி. லிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன், நகர தலைவர் சங்கர் கணேஷ், ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் விநாயக மூர்த்தி, நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் வேல்முருகன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் திருப்பதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சரவணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ரவி, நகர செயலாளர் மாரியப்பன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் கண்மணி காதர் மற்றும் ஆதி தமிழர் கட்சி, ஆதி தமிழர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், ரமேஷ், காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர் வேணுகோபால், தி.மு.க. முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ் முன்னிலை வகித்தனர். தி.மு.க. நகர செயலாளர் ஏ.கே. மணி, மாவட்ட பொருளாளர் சாகுல்கமீது, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சிக்கந்தர், ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், இளைஞரணி துணை செயலாளர் சுரேஷ்குமார், இந்திய கம்யூனிஸ்டு இளங்கோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சந்திரமோகன் உள்பட மதசார்பற்ற கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
சாத்தூர்
சாத்தூர் வடக்குரத வீதியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளை சேர்ந்த நகர, ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர், ம.தி.மு.க. முன்னாள் எம்.பி. ரவிசந்திரன் கலந்து கொண்டனர்.
காரியாபட்டி
காரியாபட்டி பஸ் நிலையத்தில் கையெழுத்து இயக்கம், திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. காரியாபட்டி நகர செயலாளர் செந்தில், ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் போஸ்தேவர், கண்ணன், திருச்சுழி சந்தனப் பாண்டியன், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்வாணன், கமலிபாரதி, சிவகுமார், தி.மு.க. செயற்குழு உறுப்பினர் மணிவாசகம், காரியாபட்டி யூனியன் துணைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் சிதம்பர பாரதி, சேகர், நரிக்குடி ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், தோப்பூர் தங்கப்பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி, லட்சுமணன், வீரசோழன், மாரிமுத்து, செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன், காரியாபட்டி நகர தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் மனோஜ் பிரபாகர், தி.மு.க. பிரமுகர் முஸ்தபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற இயக்கத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் அய்யாவு பாண்டியன் தலைமை தாங்கினார். சி.பி.எம். மாவட்ட செயலாளர் அர்ஜுனன், சி.பி.ஐ. முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான ராமசாமி, ஒன்றிய செயலாளர் வேதநாயகம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் தளவாய்பாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய குழு தலைவர் மல்லி ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் சிவகாசி பஸ் நிலையம் அருகில் தி.மு.க. மாநில வர்த்தக அணி நிர்வாகி வனராஜா தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story