பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தந்தை, மகனுக்கு கத்திக்குத்து பக்கத்து வீட்டுக்காரர் கைது


பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தந்தை, மகனுக்கு கத்திக்குத்து பக்கத்து வீட்டுக்காரர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2020 4:33 AM IST (Updated: 3 Feb 2020 4:33 AM IST)
t-max-icont-min-icon

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தந்தை, மகனை கத்தியால் குத்திய பக்கத்துவீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை போரிவிலி மேற்கு கோராய் பஸ் டெப்போ அருகில் உள்ள கவுதம்நகர் ஏக்தா சங் பகுதியில் வசித்து வரும் தொழில் அதிபர் அர்ஜூன்(வயது55). இவரது வீட்டில் சம்பவத்தன்று இரவு குடும்பத்தினர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது அதிக சத்தத்தில் பாடல் இசைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இரவு 11 மணி ஆகிவிட்டதால் பாடலை நிறுத்துமாறு பக்கத்து வீட்டை சோ்ந்த 30 வயது பிளம்பர், அர்ஜூனிடம் கூறினார். ஆனால் அவர் கேட்கவில்லை.

இதனால் பிளம்பருக்கும், அர்ஜூனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பிளம்பர் தனது வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து அர்ஜூனை குத்தினார். அப்போது, இதனை தடுக்க வந்த அர்ஜூனின் மகன் ராஜேசையும் பிளம்பர் கத்தியால் குத்தினார்.

இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிளம்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story