அமைச்சர் ஆதரவாளர் கொலை வழக்கில் 6 பேர் கைது மேலும் 5 பேருக்கு வலைவீச்சு
அமைச்சர் ஆதரவாளர் கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகூர்,
கிருமாம்பாக்கம் அருகே உள்ள பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் வீரப்பன். அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவரது மைத்துனர் சாம்பசிவம் (வயது 36) முக்கிய சாட்சியாக இருந்தார். இவரும் அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளராக இருந்தார்.
இந்த நிலையில் சாம்பசிவம் கடந்த 31-ந் தேதி காரில் வந்தபோது, கிருமாம்பாக்கம் பள்ளிக்கூடம் அருகே மர்ம கும்பலால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில் சாம்ப சிவத்தை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், அதுவரை உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் கடந்த 2 தினங்களாக அரசு ஆஸ்பத்திரியில் சவக்கிடங்கில் அவருடைய உடல் இருந்தது.
இந்தநிலையில் அமைச்சர் கந்தசாமியின் சமாதானத்தை ஏற்று சாம்பசிவத்தின் உடலை ஆஸ்பத்திரியில் இருந்து உறவினர்கள் நேற்று காலை பெற்றனர். அதையடுத்து அவருடைய உடல் பிள்ளையார்குப்பத்தில் உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சாம்பசிவத்தின் உறவினர் ராஜதுரை அளித்த புகாரின் பேரில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த அமுதன் என்பவரின் தூண்டுதலின்பேரில் அவருடைய கூட்டாளிகளான கூடப்பாக்கம் அன்பு, மணிமாறன், சார்லி, கவியரசு, வழுதாவூர் ஜெகன் ஆகியோர் சாம்பசிவத்தை கொலை செய்தது தெரியவந்தது.
அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் மேலும் 5 பேருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அமுதன், சாம்பசிவம் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்தது. சாம்பசிவம், அமுதனை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். இதை அறிந்த அமுதன் முந்திக்கொண்டு சாம்பசிவத்தை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாம்பசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் சாம்ப சிவத்தை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், அதுவரை உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் கடந்த 2 தினங்களாக அரசு ஆஸ்பத்திரியில் சவக்கிடங்கில் அவருடைய உடல் இருந்தது.
இந்தநிலையில் அமைச்சர் கந்தசாமியின் சமாதானத்தை ஏற்று சாம்பசிவத்தின் உடலை ஆஸ்பத்திரியில் இருந்து உறவினர்கள் நேற்று காலை பெற்றனர். அதையடுத்து அவருடைய உடல் பிள்ளையார்குப்பத்தில் உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சாம்பசிவத்தின் உறவினர் ராஜதுரை அளித்த புகாரின் பேரில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த அமுதன் என்பவரின் தூண்டுதலின்பேரில் அவருடைய கூட்டாளிகளான கூடப்பாக்கம் அன்பு, மணிமாறன், சார்லி, கவியரசு, வழுதாவூர் ஜெகன் ஆகியோர் சாம்பசிவத்தை கொலை செய்தது தெரியவந்தது.
அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் மேலும் 5 பேருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அமுதன், சாம்பசிவம் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்தது. சாம்பசிவம், அமுதனை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். இதை அறிந்த அமுதன் முந்திக்கொண்டு சாம்பசிவத்தை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story