நெல்லை அறிவியல் மையத்தில், காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு குறும்படம் - போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டாமோர் வெளியிட்டார்
நெல்லை அறிவியல் மையத்தில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு குறும்படத்தை போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டாமோர் வெளியிட்டார்.
நெல்லை,
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக காவலன் எஸ்.ஓ.எஸ். என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பல்வேறு இடங்களில் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்தவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாநகர காவல் துறையின் சார்பில் காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி குறித்து நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன், நெல்லை மாநகர பகுதியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி குறித்து குறும்படம் தயாரிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து பஸ்சில் நெல்லைக்கு வந்த ஒரு மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை காவலன் எஸ்.ஓ.எஸ். செயலிக்கு கொடுத்த தகவலின் பேரில் உடனே சம்பவ இடத்திற்கு போலீ சார் விரைந்து சென்று அந்த வாலிபரை கைது செய் தனர்.
இந்த சம்பவம் அந்த குறும்படத்தில் அப்படியே படமாக்கப்பட்டு உள்ளது.
இந்த காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி விழிப்புணர்வு குறும்படத்தின் வெளியீட்டு விழா நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நேற்று நடந்தது. நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் தலைமை தாங்கி, செயலியின் பயன்பாடுகள் குறித்து பேசினார்.
மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டாமோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நெல்லை அருங்காட்சியக காப்பாட்சியர் சத்தியவள்ளி, எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கணபதி சுப்பிரமணியன், அறிவியல் மைய இயக்குனர் முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story