குடிசை வீடு எரிந்து நாசம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி


குடிசை வீடு எரிந்து நாசம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
x
தினத்தந்தி 4 Feb 2020 3:30 AM IST (Updated: 3 Feb 2020 6:49 PM IST)
t-max-icont-min-icon

குடிசை வீடு எரிந்து நாசமானதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியை அம்பேத்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

சேத்துப்பட்டு, 

தேசூர் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருநாதன் என்பவரின் குடிசை வீடு தீ விபத்தில் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவலறிந்த வந்வாசி தி.மு.க. எம்.எல்.ஏ. அம்பேத்குமார் பாதிக்கப்பட்டவரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர் நிவாரணமாக ரூ.5 ஆயிரம், வேட்டி, சேலை, பாய், போர்வை போன்றவை வழங்கினார். மேலும் மோகன் அறக்கட்டளை சார்பில் ரூ.2 ஆயிரம் வழங்கினர்.

அப்போது தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சிதாபதி, தெள்ளார் ஒன்றிய செயலாளர் ராதா, தெள்ளார் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி இளங்கோ, தேசூர் நகர செயலாளர் ஜெகன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜபாண்டியன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் மனோகரன் உள்பட பலர் உடன் கொண்டனர்.

Next Story