மதுகுடிக்க மாமியார் பணம் தர மறுப்பு: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


மதுகுடிக்க மாமியார் பணம் தர மறுப்பு: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 Feb 2020 4:15 AM IST (Updated: 4 Feb 2020 12:51 AM IST)
t-max-icont-min-icon

மதுகுடிக்க மாமியார் பணம் தர மறுத்ததால் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே உள்ள கூடப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). கட்டிட தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும் தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர். முருகேசனின் 2-வது மனைவி சரசு. அவருக்கு சரோஜா என்ற மகள் உள்ளார். இதில் தனலட்சுமிக்கு திருமணமாகிவிட்டது. அவர், குடும்பத்துடன் முதலியார்பேட்டையில் அவரது தாயார் சாந்தியுடன் வசித்து வருகிறார்.

முருகேசன் 2-வது மனைவி சரசுவுடன் கூடப்பாக்கத்தில் வசித்து வந்தார். அவர்களுடன் மாமியார் மாசிலாவும் உள்ளார். முருகேசனுக்கு குடிப்பழக்கம் இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாமியார் மாசிலாவிடம் குடிப்பதற்கு முருகேசன் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த முருகேசன் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார்.

இதை பார்த்த குடும்பத்தினர், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருகேசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் தனலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story