போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற வாலிபர் மயங்கி விழுந்து சாவு


போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற   வாலிபர் மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 4 Feb 2020 3:19 AM IST (Updated: 4 Feb 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

மாங்காடு அருகே உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் திடீரென மயங்கி விழுந்ததில் இறந்து போனார்.

பூந்தமல்லி,

கொட்டிவாக்கம், வெங்கடாபுரம், சுப்பிரமணியம் தெருவை சேர்ந்தவர் சந்தீப்ராஜ் (வயது 21). இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் கடந்த 1-ந்தேதி மாங்காடு, சக்ரா நகரிலுள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இவரது பெற்றோர் கொண்டு வந்து சேர்த்தனர்.

இந்த நிலையில், சந்தீப்ராஜ் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்தீப்ராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்துபோன சந்தீப் ராஜின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.

மேலும் சந்தீப் ராஜின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், போதை மறுவாழ்வு மையத்தில் அவரை யாரேனும் தாக்கியதன் காரணமாக இறந்துபோனாரா? என்ற கோணத்திலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story