கல்பாக்கம் அருகே புதிய போலீஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயார்
கல்பாக்கம் அருகே போலீஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.
கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பஸ்நிலையம் அருகே பழைய கட்டிடத்தில் சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையம் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழுதடைந்த இந்த போலீஸ் நிலையத்தை இங்கிருந்து மாற்றி வெங்கப்பாக்கம் கிராமம் அடுத்து பூந்தண்டலம் பகுதியில் முதல்-அமைச்சர் அறிவித்த திட்டத்தின் கீழ் புதிய போலீஸ் நிலைய கட்டிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் உள்ள இந்த கிராமத்தில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க சுமார் 20 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த இடத்தில் சுமார் ரூ.78 லட்சம் செலவில் 2 தளங்களுடன் கூடிய கட்டிட கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. தற்போது கட்டுமான பணிகள், மின் வசதி, குடிநீர் குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்து போலீஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.
Related Tags :
Next Story