எனக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும் பா.ஜனதா எம்.எல்.ஏ. குமாரசாமி போர்க்கொடி
எனக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. குமாரசாமி போர்க்கொடி தூக்கியுள்ளார்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருபவர் குமாரசாமி. பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் தற்போது தனக்கும் மந்திரி பதவி வழங்கப்பட வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் சிக்கமகளூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா கட்சியில் எனது சமுதாய மக்கள் யாரும் மந்திரியாக இல்லை. அதனால் எனக்கு முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரி பதவி வழங்க வேண்டும். நான் எனது பள்ளிப்பருவம் முதலே எடியூரப்பாவின் சிஷ்யனாக இருந்து வருகிறேன்.
திறம்பட நிர்வகிப்பேன்
மற்ற கட்சிகளில் என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முக்கிய தலைவர்களாகவும், மந்திரி பதவி உள்பட முக்கிய பதவிகளையும் வகித்து வருகிறார்கள். நானும் பா.ஜனதாவை வளர்க்க பாடுபட்டவன். ஆனால் என் சமுதாய மக்கள் யாரும் பா.ஜனதாவில் முக்கிய தலைவர்களாகவோ, மந்திரிகளாகவோ இல்லை.
அதனால் எனக்கு மந்திரி பதவி கொடுங்கள் என்று நான் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மந்திரி பதவி கொடுத்தால் நான் திறம்பட நிர்வகிப்பேன்.
எனக்கு வருத்தம் இல்லை
மந்திரியாக வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும். நானும் மந்திரியாக வேண்டும் என்ற ஆசையில்தான் இருக்கிறேன். எனக்கும் மந்திரி பதவி கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் முதல்-மந்திரி எடியூரப்பாவின் கையில் உள்ளது. மந்திரி பதவி வழங்காமல் இருந்தாலும் எனக்கு வருத்தம் இல்லை.
ஆனால் என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்காவது மந்திரி பதவி வழங்க வேண்டும். என் சமுதாயத்தைச் சேர்ந்த 3 பேர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். அவர்களில் யாருக்காவது மந்திரி பதவியை எடியூரப்பா வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story