கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொல்ல முயன்ற பெண் - வாலிபருடன் கைது


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொல்ல முயன்ற பெண் - வாலிபருடன் கைது
x
தினத்தந்தி 4 Feb 2020 4:30 AM IST (Updated: 4 Feb 2020 7:34 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய முயன்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கணபதி,

கோவைமணியகாரம்பாளையம்வாசுகிவீதியை சேர்ந்தவர் குமார் (வயது 37). இவர் கணபதியில்உள்ள தனியார்நிறுவனத்தில்வெல்டராகபணியாற்றி வருகிறார். இவருடைய மனைவிசங்கீதா(32). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.திருப்பூர்மாவட்டம்உடுமலைபேட்டையை சேர்ந்தவர் பிரபு (30). இவர் தற்போது கோவைகீரணத்தம்பகுதியில் வசித்து வருகிறார்.

பால் வியாபாரியான பிரபு, தினமும் குமார்வீட்டிற்கு பால் கொடுத்து வந்து உள்ளார். அப்போதுபிரபுவுக்கும்,சங்கீதாவுக்கும்பழக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்த பழக்கம்நாளடைவில்கள்ளக்காதலாகமாறி உள்ளது.

இந்தகள்ளக்காதல்விவகாரம் குறித்து அக்கம்பக்கத்தினர்குமாருக்கு தெரிவித்துஉள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த குமார் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால்கள்ளக்காதல்ஜோடி அதைப்பற்றிகண்டுகொள்ளாமல்இருந்து உள்ளது.

ஒருகட்டத்தில்தங்கள்கள்ளக்காதலுக் குகுமார் இடையூறாக இருப்பதாக நினைத்து,அவரை கொலை செய்யவேண்டும் என்று அவர்கள் திட்டம் தீட்டி உள்ளனர்.

இந்தநிலையில்நேற்று முன்தினம் இரவு வீட்டில்தூங்கிக்கொண்டிருந்தகுமாரை, தான் கொண்டு வந்திருந்த கத்தியால் பிரபு குத்தினார். இதில் படுகாயம் அடைந்து அலறித்துடித்த குமாா்சத்தம் போட்டவாறு பிரபுவின் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.இந்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டதால் பயந்து போன பிரபு தப்பிஓடிவிட்டார்.

இதைத்தொடர்ந்து படுகாயமடைந்த குமார் மீட்கப்பட்டுஆம்புலன்ஸ்மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்தபுகாரின்பேரில்சரவணம்பட்டிஇன்ஸ்பெக்டர்செல்வராஜ்தலைமையிலானபோலீசார்வழக்குப்பதிவுசெய்துசங்கீதாமற்றும் தலைமறைவாக இருந்தபிரபுவை கைதுசெய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கோர்ட்டில்ஆஜர்படுத்தப்பட்டு கோவைமத்திய சிறையில்அடைக்கப்பட் டனர்.

Next Story