திருக்கோவிலூர் அருகே, தீயில் கருகி சிறுமி பலி - போலீசார் விசாரணை
திருக்கோவிலூர் அருகே தீயில் கருகி சிறுமி பரிதாபமாக இறந்தாள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலுர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள தாசர்புரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருடைய மகள் சாதனா (வயது 6). சம்பவத்தன்று இவளுடைய தாய் ஷீபா விறகு அடுப்பில் சுடுநீர் வைத்து விட்டு வீட்டு வேலையை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சாதனா விவரம் தெரியாமல் வீட்டில் இருந்த தின்னரை (பெயிண்டுடன் கலக்கும் திரவப்பொருள்) எடுத்து அடுப்பில் ஊற்றியுள்ளார். இதில் ஏற்பட்ட பயங்கர தீயானது சாதனா மேல் பரவி எரிந்தது. தீயில் உடல் கருகிய அவளை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவளது தாய் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாதனா பரிதாபமாக இறந்தாள். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story