எலக்ட்ரீசியனை தாக்கியவர் கைது
வேட்டவலம் அருகே கல்லாய்சொரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நவநீதி (வயது 31), எலக்ட்ரீசியன். இவரது மனைவி தமிழேந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் குமார் (38), கட்டிட மேஸ்திரி.
வேட்டவலம்,
குமாருக்கு சந்திரா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நவநீதிக்கும் சந்திராவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் குமாருக்கும் சந்திராவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சந்திரா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கடந்த 1–ந் தேதி காளியங்குப்பம் ஏரியில் குமாரும், நவநீதியும் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குமார் நவநீதியை கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நவநீதி சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்கா புதுச்சேரி தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தமிழேந்தி கொடுத்த புகாரின் பேரில் வேட்டவலம் சப்–இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜீலு வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தார்.
Related Tags :
Next Story