குமரி மாவட்டத்தில் 3–ம் பாலினத்தவருக்கு விருது; கலெக்டர் தகவல்
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் சிறப்பாக முன்னேறிய 3–ம் பாலினத்தவர்களில் ஒருவருக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. எனவே தகுதி உடையவர்கள் 13–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆனால் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்கையில் முன்னேறி இருக்க வேண்டும். குறைந்தது 3–ம் பாலினத்தவர்கள் 5 பேருக்கு வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். 3–ம் பாலினர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது.
விண்ணப்பங்களை நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து மீண்டும் அங்கேயே அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story