திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா
x
தினத்தந்தி 5 Feb 2020 3:30 AM IST (Updated: 4 Feb 2020 9:20 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2017–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ந்தேதி ரோகிணி நட்சத்திர நாளில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருவண்ணாமலை, 

ஆகம விதிகளின் படி எந்த தமிழ் மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததோ அதே மாதம் அதே நட்சத்திர நாளில் வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். 

அதன்படி இந்த ஆண்டு தை மாதம் ரோகிணி நட்சத்திர நாளான நேற்று கும்பாபிஷேகம் நடந்து 3 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வருஷாபிஷேக விழா நடந்தது. 

இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் கோவிலில் முதல் காலை யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலையில் 2–ம் கால யாக பூஜை நடந்தது.

அந்த பூஜைகள் முடிந்தபின்னர் யாக சாலையில் புனித நீர் அடங்கிய கலசங்கள் வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. 

பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்து சென்று அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மன் உள்பட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. 

பின்னர் இரவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. 

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் நாட்டுக் கோட்டை நகரத்தார், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Next Story