பேரூராட்சி பணிகளை தடுத்து நிறுத்தியதாக முன்னாள் கவுன்சிலர் உள்பட 10 பேர் மீது வழக்கு
பேரூராட்சி பணிகளை தடுத்து நிறுத்தியதாக முன்னாள் கவுன்சிலர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் ரவி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் 18- வது வார்டு வள்ளலார் நகர் பகுதியில் வனமீட்பு பூங்காவில் கடந்த 8 ஆண்டுகளாக குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் திடக்கழிவு மேலாண்மை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் உள்ள இரும்பு கேட்டை பூட்டு போட்டு பூட்டி பேரூராட்சி பணிகளை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தும் 18-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் குமரவேல், அந்த பகுதியை சேர்ந்த நாகேஸ்வரன், சரவணன் பிள்ளை, சீனிவாசன், கிருஷ்ணகுமார், துரை, மாரிமுத்து மற்றும் பெண்கள் உள்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
10 பேர் மீது வழக்கு
புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி போலீசார் முன்னாள் கவுன்சிலர் குமரவேல் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story