பாகூர் அருகே கோவிலில் திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது
பாகூர் அருகே கோவிலில் திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாகூர்,
பாகூரை அடுத்துள்ள நிர்ணயப்பட்டு கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம்நள்ளிரவில் மர்ம ஆசாமிகள்இந்தகோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்கள் மர்ம ஆசாமிகளின் நடமாட்டத்தை அறிந்து, ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.உடனே பொதுமக்கள் அங்கு வந்தனர். இதை பார்த்தமர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடமுயன்றனர்.அவர்களை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து,தர்மஅடிகொடுத்தனர்.பின்னர் அவர்கள் பாகூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில், கடலூர் மாவட்டம் முள்ளிகிராம்பட்டு கிராமத்தை சேர்ந்த தினேஷ் (வயது 22), அஜித்குமார் (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு பாகூர் மற்றும் பரிக்கல்பட்டு கோவில்களில் சமீபத்தில் நடந்த திருட்டில் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story