நேருவீதி வணிக திருவிழாவில் கலைநிகழ்ச்சி
புதுவை நேரு வீதி வணிக திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
புதுச்சேரி,
புதுவை நேரு வீதி வியாபாரிகள் சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி வணிகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழா வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது.
வணிக திருவிழாவில் பங்கேற்றுள்ள துணி, நகை, எலக்ட்ரானிக் கடைகளில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வாங்கும் பொருட்களின் மதிப்புக்கு ஏற்ப பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு கவர்ச்சிகரமான பரிசு பொருட்களும் வழங்கப்பட உள்ளது.
தள்ளுபடி விலையில் விற்பனை
வணிக திருவிழாவினையொட்டி நேரு வீதியில் உள்ள துணிக்கடைகளில் புதிய டிசைன்களில் பட்டு, பேன்சி புடவைகள், சுடிதார்கள், ஆண்கள், குழந்தை களுக்கானஆடைகள் குவித்து வைக்கப்பட்டுஉள்ளன.
நகைக் கடைகளில் வளையல் திருவிழா, செயின் திருவிழா என்று நூற்றுக்கணக்கான டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வந்துள்ளது. எலக்ட்ரானிக் கடைகளில் வீட்டு உபயோக பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பொம்மலாட்டம்
இந்த வணிக திருவிழாவில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பொம்மலாட்ட கலைநிகழ்ச்சி நடந்தது. இதனை ஏராளமான வாடிக்கையாளர்கள் கண்டு ரசித்தனர்.
வாடிக்கையாளர்கள் கடைகளில் வழங்கப்படும் பரிசு கூப்பன்களை வருகிற 20-ந்தேதிக்குள் ராம் சில்க்ஸ் மற்றும் ஜெயா எம்போரியம் அருகில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்களில் கொடுத்து பரிசுக்கான டோக்கனாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
இந்த டோக்கன்களை வருகிற 28, 29 மற்றும் மார்ச் 1-ந் தேதிகளில் கொடுத்து பரிசுகளை பெற்றுக்கொள்ளலாம்.
Related Tags :
Next Story