உத்திரமேரூர் அருகே எந்திரத்தில் சிக்கி வடமாநில வாலிபர் பலி


உத்திரமேரூர் அருகே   எந்திரத்தில் சிக்கி வடமாநில வாலிபர் பலி
x
தினத்தந்தி 5 Feb 2020 4:43 AM IST (Updated: 5 Feb 2020 4:43 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே தனியார் நிறுவனத்தில் எந்திரத்தில் சிக்கி வடமாநில வாலிபர் பலியானார்.

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் தாலுகா புல்லம்பாக்கம் கிராமத்தில் சிமெண்டு கற்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நிகாபிரதான் (வயது 25) என்ற வடமாநில வாலிபர் எந்திர ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். நேற்று காலை எந்திரத்தை இயக்கியபோது எதிர்பாராத விதமாக எந்திரத்தில் சிக்கிக்கொண்டார். இதில் நிகாபிரதான் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நிகாபிரதானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story