ஆபாச படம் காண்பித்து பள்ளியில் மாணவிகளை மானபங்கம் செய்த ஆசிரியர் கைது
ஆபாச படம் காண்பித்து பள்ளியில் மாணவிகளை மானபங்கம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
நாக்பூர்,
நாந்தெட் நகரின் மால்தேக்டி பகுதியில் ஆரம்ப பள்ளி செயல்பட்டு வரு கிறது. இந்த பள்ளியில் சுவப்னில் சுருங்கரே என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த பள்ளியில் படித்து வரும் 10 வயது மாணவி ஒருத்திக்கு கடந்த சனிக்கிழமை பள்ளி முடிந்து வந்ததும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதுபற்றி மாணவியிடம் பெற்றோர் கேட்டபோது, ஆசிரியர் சுவப்னில் சுருங்கரே பள்ளியில் வைத்து செல்போனில் ஆபாச படம் காண்பித்து தன்னை மானபங்கம் செய்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தாள். இதை கேட்டு அவளது பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர்.
ஆசிரியர் கைது
இந்த நிலையில், ஆசிரியர் சுவப்னில் சுருங்கரே செல்போனில் ஆபாச படம் காண்பித்து மேலும் 4 மாணவிகளை மானபங்கம் செய்திருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர் நேற்றுமுன்தினம் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் சுவப்னில் சுருங்கரேயை பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.
அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story