தேர்தல் முன்விரோத தகராறில் தொழிலாளிக்கு கத்தி வெட்டு - வாலிபர் கைது
நெய்வேலி அருகே தேர்தல் முன்விரோத தகராறில் தொழிலாளியை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி,
நெய்வேலி அருகே உள்ள இந்திராநகர் மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் ஆனந்தராஜ் (வயது 25). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (28). இளையராஜா, ராமதாஸ், கருப்பு என்கிற ஆனந்தராஜ், சேகர், பாண்டியன், பாஸ்கர்,அய்யப்பன் ஆகியோருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த முருகன் உள்ளிட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஆனந்தராஜை கத்தியால் வெட்டியதோடு, கட்டையாலும் தாக்கினர். பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆனந்தராஜிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு முருகனை கைது செய்தனர். இளையராஜா உள்பட 7 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story