பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டித்து சேலத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டித்து சேலத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Feb 2020 7:00 AM GMT (Updated: 5 Feb 2020 6:48 AM GMT)

பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டித்து சேலத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்,

மத்திய அரசு எல்.ஐ.சி. (ஆயுள் காப்பீட்டு கழகம்) நிறுவன பங்குகளை விற்பனை செய்ய போவதாக அறிவித்து உள்ளது. இதற்கு எல்.ஐ.சி. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து நாடு முழுவதும் 1 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையொட்டி நேற்று சேலம் மாவட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில், சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்ட தலைவர் நரசிம்மன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து கோட்ட தலைவர் நரசிம்மன் கூறியதாவது:- 1995-ம் ஆண்டு ரூ.5 கோடி முதலீட்டில் எல்.ஐ.சி. நிறுவனம் தொடங்கப்பட்டது அதற்கு பிறகு கூடுதல் முதலீடு தேவைப்படவில்லை. பங்கு சந்தைக்கு கொண்டு வருவதற்காகவே சட்ட நுணுக்கங்களை காரணம் காட்டி ரூ.100 கோடியாக மூலதனத்தை உயர்த்தினார்கள். கடந்த ஆண்டு பங்கு ஆதாயமாக 2 ஆயிரத்து 611 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

எனவே பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டிக்கிறோம். பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம் செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story