சோளிங்கரில் போலீஸ் நிலைய செயல்பாடுகளை மாணவர்கள் பார்வையிட்டனர்


சோளிங்கரில் போலீஸ் நிலைய செயல்பாடுகளை மாணவர்கள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 6 Feb 2020 3:30 AM IST (Updated: 5 Feb 2020 9:20 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர் காவல் படையை சேர்ந்த 44 மாணவர்கள் போலீஸ் நிலைய செயல்பாடுகளை பார்வையிட்டனர்.

சோளிங்கர், 

காவல்துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கியின் வகைகள், அதன் திறன், செயல்பாடுகள், கையாளும் முறைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு, குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு, குற்றம் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல், போக்குவரத்து நெரிசல் குறித்து விளக்கி கூறப்பட்டது.

மேலும் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், வரவேற்பாளர், எழுத்தர் ஆகியோரின் பணிகள் குறித்து மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் விளக்கி கூறினார்.

சோளிங்கரில் 6 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த காவல் படையில் உள்ளனர்.

முன்னதாக பாட்டிகுளம் அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் காவல் படை தொடக்க விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி.யும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான கோபால் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். முடிவில் சமுதாய காவல் அலுவலர்கள் சந்திரசேகரன், சுரே‌‌ஷ்குமார் நன்றி கூறினர்.

Next Story