எருதுவிடும் விழா; 10 பேர் காயம்
ஆற்காட்டான்குடிசையில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் 10 பேர் காயம் அடைந்தனர்.
அடுக்கம்பாறை,
அடுக்கம்பாறை அருகே உள்ள ஆற்காட்டான்குடிசை கிராமத்தில் மெச்சியம்மன் திருவிழாவையொட்டி எருதுவிடும் விழா நேற்று நடந்தது. வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார்.
வேலூர் தாசில்தார் சரவணமுத்து, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல துணை தாசில்தார் விநாயகமூர்த்தி, பென்னாத்தூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ரீனா வரவேற்றார். இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 85-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
காளை ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. சாலையின் நடுவே மண் கொட்டப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்த பின்னரே விழாவில் கலந்துகொள்ள அனுமதி அளித்தனர். காலை 10 மணி அளவில் தொடங்கிய விழாவில் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
காளைகள் சீறிப் பாய்ந்து ஓடியதில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழாவை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story