புதிய பஸ்நிலையத்தில் கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது


புதிய பஸ்நிலையத்தில் கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 6 Feb 2020 3:45 AM IST (Updated: 5 Feb 2020 9:56 PM IST)
t-max-icont-min-icon

ரூ.45 கோடியில் விரிவாக்கம் செய்ய புதிய பஸ்நிலையத்தில் கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது

வேலூர், 

வேலூர் புதிய பஸ்நிலையம் ரூ.45 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதையொட்டி, பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது.

வேலூர் புதிய பஸ்நிலையம், ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.45 கோடியில் பல்வேறு நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனால் புதிய பஸ்நிலையத்தில் இருந்து செல்லும் பஸ்களில் சென்னை மற்றும் பெங்களூரு, திருப்பத்தூர், சேலம் மார்க்கங்களில் செல்லும் பஸ்கள் புதிய பஸ்நிலையத்திலேயே செல்லியம்மன் கோவிலுக்கு பின்பகுதியில் உள்ள காலியிடத்தில் இருந்து செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் பழைய பஸ்நிலையத்தில் இருந்து இயக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கானபணிகள் நடைபெற்று வருகிறது.

புதிய பஸ்நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதால், பஸ்நிலையத்தில் உள்ள மாநகராட்சி கடைகளை மூடும்படி மாநகராட்சி சார்பில் கடைஉரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் கடைகளை பூட்டி கடந்த 3-ந் தேதி மாநகராட்சியிடம் சாவியை ஒப்படைத்துவிட்டனர்.

இதனால் அவர்கள் தற்போது ஏற்கனவே கடை வைத்திருந்த பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் கடைநடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதிய பஸ்நிலையத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி ேநற்று தொடங்கியது.

முதல் கட்டமாக செல்லியம்மன் கோவில் பகுதியில் பஸ்கள் உள்ளேநுழையும் இடத்தில் உள்ள ஓட்டல் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கடையின் மேற்கூரையை அகற்றிவிட்டு, சுவரும் இடிக்கப்பட்டது.

அதேபோன்று அதன் அருகிலேயே செல்லியம்மன் கோவிலுக்கு பின்பகுதியில் காலியாக இருக்கும் இடத்தில் இருந்து சென்னை, சேலம், பெங்களூரு, திருப்பத்தூர் செல்லும் பஸ்கள் நிற்பதற்கு வசதியாக அங்கு தார்சாலை அமைக்கும் பணியும் தொடங்கி உள்ளது.

Next Story