செங்கல் சூளையில் இருந்து கொத்தடிமைகள் 42 பேர் மீட்பு ஆர்.டி.ஓ. நடவடிக்கை


செங்கல் சூளையில் இருந்து  கொத்தடிமைகள் 42 பேர் மீட்பு  ஆர்.டி.ஓ. நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Feb 2020 4:00 AM IST (Updated: 6 Feb 2020 12:08 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்த 42 பேர் மீட்கப்பட்டனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் தனியார் செங்கல் சூளை ஒன்று இயங்கி வருகிறது. இதில்,  கொத்தடிமைகளாக பலர் வேலை செய்வதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்நிலையில், கலெக்டர் உத்தரவின் பேரில், ஆர்.டி.ஓ. வித்யா தலைமையில், ஊத்துக்கோட்டை தாசில்தார் முருகானந்தம் மற்றும் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் தனியார் செங்கல் சூளையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு 13 சிறுவர்கள் மற்றும் 29 பெரியவர்கள் என மொத்தம் 42 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை மீட்ட அதிகாரிகள், ஆர்.டி.ஓ. அலுவலகம் கொண்டு சென்றனர். அங்கு மீட்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தலா ரூ.20ஆயிரம் மற்றும் விடுப்பு ஆணை வழங்கப்பட்டது. பின்னர், அவர்களை அவர்களது சொந்த மாவட்டங்களான விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Next Story