கூடுவாஞ்சேரி- கொட்டமேடு இடையே புதிதாக அமைக்கப்படும் 4 வழிச்சாலையில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை


கூடுவாஞ்சேரி- கொட்டமேடு இடையே    புதிதாக அமைக்கப்படும் 4 வழிச்சாலையில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 6 Feb 2020 4:00 AM IST (Updated: 6 Feb 2020 12:28 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி- கொட்டமேடு இடையே புதிதாக அமைக்கப்படும் 4 வழிச்சாலையில் தடுப்புகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு வரை 17.6 கிலோமீட்டர் இரு வழிச்சாலை செல்கிறது. இந்த சாலை மத்திய அரசின் சாலை நிதி திட்டத்தின் கீழ் ரூ.76 கோடி மதிப்பில் 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி தொடங்கி தற்போது நடந்து வருகிறது. கன்னிவாக்கம் வரை 4 வழிச் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் நடுவில் தடுப்புகள் அமைக்கப்படவில்லை, இதனால் 4 வழிச்சாலையில்வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு சில சமயங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது.

கோரிக்கை

மேலும் 4 வழியாக சாலை அகலப்படுத்திய பிறகும் ஒரு சிலர் சாலையை ஆக்கிரமித்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்பு செய்வதைதடுக்கவும், சாலை விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கு புதிதாக அமைக்கப்பட்ட 4 வழிச்சாலையின் நடுவில் உடனடியாக சிமெண்டு தடுப்பு அமைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story