தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் விற்பனை; 3 கடைக்காரர்கள் கைது
தூத்துக்குடியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 3 கடைக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வடபாகம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மட்டக்கடை பஜாரில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த கடையின் உரிமையாளரான வன்னியராஜ் (வயது 44) என்பவரை கைது செய்தனர். அந்த கடையில் இருந்து 19 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே போல் கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள பெட்டிக்கடையிலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கடையின் உரிமையாளராக அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (54) என்பவரை கைது செய்தனர். அவர் கடையில் இருந்து 11 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி நந்தகோபாலபுரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் போலீசார் சோதனை நடத்திய போது அந்த கடையிலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கடையின் உரிமையாளரான ஆசீர் அருண்பிரகாஷ் (40) என்பவரை கைது செய்தனர். அந்த கடையில் இருந்து 7 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story