இந்துத்வா கொள்கையில் இருந்து சிவசேனாவை பிரிக்க காங்கிரஸ் சதி சந்திரகாந்த் பாட்டீல் சொல்கிறார்
இந்துத்வா கொள்கையில் இருந்து சிவசேனாவை பிரிக்க காங்கிரஸ் சதி செய்கிறது என்று மராட்டிய பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறினார்.
மும்பை,
மராட்டிய மாநில பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் ஒரு சிவசேனா ரசிகன். மராத்திய கலாசாரம் உயிரோட்டமாக இருப்பதற்கும், இந்துக்கள் வாழ்ந்து கொண்டு இருப்பதற்கும் சிவசேனா காரணமாக இருப்பதாக உணருகிறேன். ஏனெனில் பல கலவரங்களில் மக்களை பாதுகாப்பதில் சிவசேனாவினர் உறுதியாக இருந்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது சிவசேனாவை இந்துத்வா கொள்கையில் இருந்து பிரிக்க காங்கிரஸ் கட்சி சதி செய்கிறது. அந்த இடத்தில் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி அனுமதிக்கப்படுகிறது.
புரிந்து கொள்ள வேண்டும்
இந்த சதி திட்டத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இந்துத்வா கொள்கையில் நவநிர்மாண் சேனா வருவதை பாரதீய ஜனதா வரவேற்கிறது. சிவசேனா இந்துத்வாவை கைவிடவில்லை என்று கூறி உத்தவ் தாக்கரே மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறார். உண்மையில் இந்துத்வாவை கைவிடவில்லை என்றால், சிவசேனா ஏன் வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை விடுக்கவில்லை? காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயுடன் வீரசாவர்க்கருக்கு உடல் ரீதியாக தவறான உறவு இருந்ததாக காங்கிரசின் சேவா தளம் அமைப்பு வெளியிட்ட சர்ச்சை புத்தகம் தொடர்பாக அமைதி காப்பது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story